கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

  • 2 years ago
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு முதல் நாளான இன்று கொடியேற்றதுடன் துவங்கியது. நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கொங்கு ஏழு ஸ்தலங்களில் முதல் தலமாக விளங்கி வரும் இந்த ஆலயத்தில் சுவாமி ஆநிலையப்பர் என்றழைக்கப்படும் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி சுயம்பு வடிவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் அலங்காரவல்லி, சவுந்திரநாயகியுடன அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் பெருந்து திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்தி, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர் மேலும் இன்று துவங்கி இந்த பெருந்திருவிழா 14 நாட்கள் நடைபெறும், விழாவை தொடர்ந்து நாள்தோறும் அலங்காரவல்லி, சவுந்தரவள்ளி நாயகியுடன் சுவாமி ஆலயத்தை சுற்றி உள்ள நான்கு மடாவளகம் சுற்றி பக்தர்களுக்கு காட்சியப்பார். இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 18-ம் தேதி திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெறும். நாள்தோறும் இந்த ஆலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வார்கள்.