#templevision #tv24 #ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ செளபாக்கிய நாயகி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை தீபம் |

  • 3 years ago
ராமநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ சௌபாக்கிய நாயகி அம்மன் ரத்தினேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை கல்யாண முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்ட பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வெகு விமரிசையாக நடைபெற்றன முன்னதாக 3 நிலைகளை உடைய கோபுரத்தில் கார்த்திகை விளக்கு ஏற்றப்பட்டு கோவில் கோபுரத்திற்கு முன் உள்ள நந்திக்கு கண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பரிவார தெய்வங்களான விநாயகர் முருகன் லட்சுமி சரஸ்வதி துர்க்கை வராகி அனுமன் சூரியன் சந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆலயத்தின் முன் வைக்கப்பட்ட சொக்கப்பனை மகா தீபம் ஏற்றப்பட்டு திருக்கார்த்திகை நிறைவுபெற்றன வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் மகா தீபாராதனை பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன