மணியம்மையார் சாட் ஆன எஸ்.கே.அய் என். எஸ்எல்வி 9- வீடியோ

  • 5 years ago
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவியர்கள் இணைந்து ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த எஸ்.கே.அய்.என் எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோளை பல்கலைக்கழக திறந்த வெளி மைதானத்திலிருந்து விண்ணில் செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ மையத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், பிரபல விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர் . மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

இந்த செயற்கை கோளினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறையில் பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 15 மாணவியர்கள் கூட்டாக சேர்ந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று கூட்டு முயற்சியுடன் தயாரித்துள்ளனர். இதனை அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டில் பெருமை சேர்க்கும் விதமாக எஸ்.கே.அய் என். எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் என பெயர் சூட்டியுள்ளனர்.

des: In the eulogy of the EWRManiamayar century, The SLV has been named the 9 nanimiyar Chad.