அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை விழா காய்கறிகளை படைத்து மாசாணி அம்மனை வழிபட்ட பக்தர்கள்.

  • 5 years ago
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆனந்தி நகரில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத சிவராத்திரியின் 11 வது ஆண்டு மயான கொள்ளைவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் காய்கறி படையலிட்டு கிடா வெட்டி, மாசாணி அம்மனை வழிபட்டனர் முன்னதாக மயான கொள்ளையையொட்டி ஆலயத்தில் பெரியாண்டவருக்கு கபால பூஜை ,அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மஹாதீப ஆராதனை நடைபெற்றது மயான கொள்ளையின் முக்கிய நிகழ்ச்சியாக அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி திருத்தேரில் பவனிவந்தார். அம்மனின் திருஉருவ வேடம் அணிந்து பக்தர்கள் புடைசூழ ஆலய பூசாரி நகர் வலம் வந்தார். பின்னர் ஆரணி ஆற்றங்கரையில் 18 அடி நீளத்தில் காய்கறிகளால் படைக்கப்பட்ட மாசாணி அம்மானிடம் வந்தடைந்ததும் பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் கிடா வெட்டி பூஜை செய்து வழிபட்டனர். மாசாணி அம்மனுக்கு படைக்கப் பட்ட எலுமிச்சை மற்றும் காய்கறிகளை பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றிட போட்டி போட்டு பக்தியுடன் அள்ளி சென்றனர்

Angala Parameshwari Temple is a temple for the devotees who worshiped Masani Amman.