#BOOMINEWS | செங்கம் அருகே காமாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

  • 3 years ago
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாமந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவில் அந்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை அமைத்து அம்மனுக்கு வேதங்கள் முழுங்க 1008 கலசங்கள் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பின்னர் புன்னிய தீர்த்தம் எடுத்து வந்து 51 அடி உயரமுள்ள அம்மன் கோவில் உச்சியில் அமைத்துள்ள ஐம்பொன்னாலான கலசத்திற்க்கு பூஜை மற்றும் தீபாரதனை செய்து புன்னிய தீர்த்தம் கலசம் மேல் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அப்போது கோயில் அருகில் இருந்த பகதர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி முழக்கம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். சாமந்திபுரம்- பிஞ்சூர்- அரட்ட வாடி உள்ளீட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.