பசுமை வழிச்சாலை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே தன்னை கைது செய்துள்ளனர் - கௌதமன்

  • 6 years ago
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவேரி விவகாரம் தொடர்பாக சென்னையில் திரைத்துரையினர் பங்கு பெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கவிஞர் வைரமுத்து திரைப்பட இயக்குனர் பாரதிராஜா நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் திரைப்பட இயக்குனர் கௌதமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கௌதமனை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே திருவல்லிக்கேணி காவல் நிலையம் கொண்டு செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் கவுதமன், தன்னை ஐபிஎல் போராட்டத்திற்காக கைது செய்யவில்லை என்றும் பசுமைவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே தன்னை போலீசார் கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர் கவுதமனை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பானுமதி முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குனர் கவுதமனை ஜூலை 6-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இயக்குனர் கவுதமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV