• 7 years ago
நடிப்பால் தன்னை ஒருவர் இம்பிரஸ் செய்துவிட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாக உள்ளார் சமந்தா. அவர் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த ரங்கஸ்தலம் தெலுங்கு படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. சமந்தாவின் படம் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது இது 8வது முறையாகும். சமந்தா ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் நேற்று சாட் செய்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றி கேள்வி எழுப்பினார். சிவகார்த்திகேயனுடன் வேலை பார்த்தது செம ஜாலி. அவருடைய காமிக் டைமிங் சூப்பர் என்று சமந்தா தெரிவித்துள்ளார். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சிறந்த நாள் எது என்ற கேள்விக்கு சமந்தா, எனக்கு திருமணமான நாள் என்று பதில் அளித்துள்ளார் சமந்தா. நடிப்பால் உங்களை அண்மையில் அசத்திய நடிகை அல்லது நடிகர் என்ற கேள்விக்கு சாய் பல்லவி என்று பதில் அளித்துள்ளார் சமந்தா.


Samantha had a chat session with her fans on twitter. She said that Sai Pallavi is the actress who impressed her recently with her acting skills.

Category

🗞
News

Recommended