சென்சாரில் சர்ச்சை கிளப்பும் விஷாலின் இரும்புத்திரை!- வீடியோ

  • 6 years ago
இரும்புத்திரை படம் மார்ச் 29 வருவது சந்தேகம் தான். ஆனால் படத்தை சென்சார் செய்து முடித்து விட்டார்கள். படத்துக்கு யு சர்டிஃபிகேட்டும் கிடைத்து விட்டது. ஆனால் சென்சாரில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதாம். படத்தில் சைபர் க்ரைம், டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலமான கொள்ளை ஆகியவற்றை படம் பிடித்துள்ளார்கள். முக்கியமாக டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படம் போன்ற தோற்றம் கொண்டுள்ளதாம். படத்தில் வரும் சம்பவங்களுக்கு ஆதாரங்கள் கேட்க ஒவ்வொன்றாக எடுத்து நீட்டினாராம் இயக்குநர். இருந்தாலும் கூட இரண்டு மணி நேர விவாதத்துக்கு பிறகு படத்துக்கு சர்டிஃபிகேட் தந்துள்ளார்கள்.
பட ரிலீஸின் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் இருக்கு!

irumbuththirai has got U certificate in censor after many heated arguements.'