• 7 years ago
தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருபவர்கள், "அட.. ஜெயிக்கணும்னா, நெனச்சது நடக்கணும்னா... மச்சம் வேணும்... லக் வேணும்.. சும்மா எல்லாருக்கும் கிடைச்சிடாது.." என்று கூறுவது உண்டு. வெற்றிக்கு மட்டுமல்ல, காதலுக்கும் கூட மச்சம் வேண்டும் என்று கூறும் நபர்களை நீங்கள் கண்டிருக்கலாம். உங்கள் நட்பு வட்டாரத்தில் அழகாக இருக்கும் ஆணை விட, சுமாரான நபர் ஒருவருக்கு அதிக பெண் தோழிகள் இருக்கலாம். உடனே... அவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு போலடா என்று சிலர் பொறாமையில் பொங்குவார்கள். இருக்கலாம்... சிலருக்கு நிஜமாகவே நல்ல மச்சம், நல்ல இடத்தில் இருக்கலாம். அந்த மச்சத்தின் காரணமாக கூட அவர்கள் வாழ்வில் நல்லது, கெட்டது அவர்கள் அறியாமலே அளவுக்கு அதிகமாக நடக்கலாம். இதில், முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம் என்று இந்த தொகுப்பில் காணலாம்...

How Your Face Moles Reveal About Personality?

Recommended