அந்தரத்தில் சுழன்று வித்தை செய்த அமெரிக்க வீராங்கனை!-வீடியோ

  • 6 years ago
தென்கொரியாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இன்று ஐஸில் விளையாடும் ஃபிரி ஸ்கெட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் ரஷ்யா, கனடா உள்ளிட்ட நாட்டு வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். அதேபோல் அமெரிக்க வீராங்கனைகளும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். முக்கியமாக அமெரிக்க வீராங்கனை மிராய் நகாசு இதில் புதிய சாதனை ஒன்று படைத்து இருக்கிறார்.

இவர் இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடினார். இவர் டிரிபிள் ஆக்ஸல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். இந்த சாதனையை படைக்கும் முதல் அமெரிக்க பெண் இவர்தான். உலக அளவில் மூன்றாவது பெண் ஆவார்.

US athlete Mirai Nagasu competes in the figure skating team event during the Pyeongchang Winter Games at the Gangneung Ice Arena.