சாய் பல்லவிக்கு வந்த சோதனை...

  • 6 years ago
'பிரேமம்' படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட 'மலர் டீச்சர்' சாய் பல்லவி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். சாய் பல்லவியின் புது கெட்டப்பில் வெளியான சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். சாய் பல்லவியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாய் பல்லவி 'பிரேமம்' படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர். இவர் தமிழில் 'கரு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யா மற்றும் தனுஷுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவியின் கெட்டப் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். மேலும், "இது சாய் பல்லவி தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றம் இப்புகைப்படத்தில் முழுவதுமாக மாறியுள்ளது.


Sai pallavi celebrated by 'Premam', currently starring in many leading actors films. Fans are shocked to see the recent photo of Sai Pallavi. This latest photo of Sai Pallavi is going viral on social networks.

Category

🗞
News

Recommended