அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி அஞ்சலி!- வீடியோ

  • 6 years ago
குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லி அமர்ஜவான் ஜோதியில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாட்டின் 69வது குடியரசுத் தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு டெல்லி இந்தியா கேட் அருகில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படை தளபதிகளுடன் மலர்வளையம் வைத்த மவுன அஞ்சலி செலுத்தினர்.

Prime minister Modi has paid tribute at Amar jawan jothi in Delhi. Defence minister Nirmala seetharaman also was paid tribute. India celebrates 69th republic day