ரஜினி கட்சிக்கு 23 சீட் கிடைக்கும்-சொல்வது யார் தெரியுமா?

  • 6 years ago
ரஜினி கட்சி ஆரம்பித்து (இன்னும் டவுட்டாதானே இருக்கு) அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் அவரது கட்சிக்கு 23 தொகுதிகளில் வெற்றி கிடைக்குமாம்.. தமிழகத்தில் ரஜினி மாபெரும் சக்தியாக உருவெடுப்பாரம். கிங் மேக்கராக வருவாராம். எல்லாக் கட்சிகளுக்குமே அவர் சிம்ம சொப்பனமாக இருப்பாராம்.. நாங்க சொல்லலைங்க, அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியும் சி வோட்டரும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு சொல்கிறது. நாட்டின் மிக மிக "நடுநிலையான" சானல் ரிபப்ளிக் என்பது உலகுக்கே தெரியும். அர்னாபின் இதயம் "யாருக்காக" துடிக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சானல் நடத்தியுள்ள கருத்துக் கணிப்புதான் இது. சமூக வலைதளங்களில் இந்த கருத்துக் கணிப்பை தற்போது செமையாக கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
சரி அந்தக் கருத்துக் கணிப்பில் அப்படி என்னதான் சிரிக்கும்படி இருக்கிறது என்பதை சற்று சீரியஸாகவே பார்ப்போம். இதுதான் கருத்துக் கணிப்பு: ரிபப்ளிக் டிவி- சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு இது. இதில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடந்தால் யாருக்கு எத்தனை சீட் கிடைக்கும் என்பதை கணித்துள்ளனர்
தமிழகத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து, தேர்தலிலும் போட்டியிட்டால் அவர் மற்ற கட்சிகளுக்குப் பெரும் போட்டியாக இருப்பாராம். தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் மட்டுமல்லாமல், திமுகவுக்கும் அவர் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவாராம். ஆனால் பாதிப்பு என்பது பாஜகவை விட காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் அதிகம் இருக்குமாம்.

Republic TV C Voter survey has predicted big win for Rajinikanth's new party in LS polls. It sayd that Rajini party will get 23, but Netizens are now trolling this survey in Social Media.