ஜாஸ்மின் பட இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா ராய் கோபத்தில் உள்ளாராம்.

  • 6 years ago
ஜாஸ்மின் பட இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா ராய் கோபத்தில் உள்ளாராம். அனில் கபூருடன் சேர்ந்து ஃபேனி கான் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் வாடகை தாய் பற்றிய கதை கொண்ட ஜாஸ்மின் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை அணுகியதாகவும், அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. முதலில் இந்த படத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஜாஸ்மின் படத்தில் நடிக்கச் சொல்லி ஐஸ்வர்யாவை யாரும் அணுகவில்லையாம். ஸ்க்ரிப்டை கூட கண்ணில் காட்டாமல் தன் பெயரை பயன்படுத்திய இயக்குனர்கள் மீது ஐஸ்வர்யா கோபத்தில் உள்ளாராம். இயக்குனர்கள் செய்த குளறுபடியால் அவர்கள் இனி கேட்டாலும் ஐஸ்வர்யா ஜாஸ்மின் படத்தில் நடிப்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

Aishwarya Rai is very upset with Jasmine movie's director for using her name to promote the movie. It has been rumoured that Aishwarya Rai has agreed to act un the movie. But in reality she wasnt approached by anyone from the film crew. So, she is really pissed that the director used her name for promoting his movie.

Recommended