எச்.ராஜா வீட்டிற்கு பாதுகாப்பு- வீடியோ

  • 6 years ago

கவிஞர் வைரமுத்துவை இழிவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பகீரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அவரது வீட்டை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட போவதாக தகவல் வெளியானதையடுத்து ராஜாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் எச். ராஜா. இவர் பாஜகவின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் எச். ராஜா கவிஞர் வைரமுத்துவை இழிவாக பேசியதாகவும் அதற்கு பகீரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ராஜாவின் வீட்டை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட போவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள எச். ராஜாவின் வீடு மற்றும் கண்டனூரில் உள்ள பண்ணை தோட்டத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Des : The Raja's house has been heavily guarded by the police after the information revealed that we are going to screw the BJP national secretary H Raja's house.