பாஜக திடீரென முந்தியது எப்படி? பரபர காரணங்கள்

  • 7 years ago
முதல்கட்ட தேர்தல்கள் நடைபெற்ற தொகுதிகளை விட 2வது கட்டமாக தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் பாஜக அதிகம் முன்னிலை பெற்றுள்ளது. இதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் ஆரம்பத்தில் காங்கிரஸ் ஓரளவுக்கு முன்னிலை பெற்றது. இதனால் மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுவதை போன்ற தோற்றம் ஏற்பட்டது.ஆனால், பிறகு பாஜக பக்கம் காற்று வீச ஆரம்பித்தது. 2வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில்தான் பாஜகவுக்கு முன்னிலை அதிகமாக கிடைத்தது. இதற்கு பல காரணங்களை அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்

முதல்கட்ட தேர்தல் முடிந்த பிறகு பிரச்சார தொனியை வேறு மாதிரி மாற்றினார் மோடி. முதலில் பொதுவான பிரச்சினைகளை பற்றி பேசிய மோடி பிறகு பாஜகவின் வழக்கமான தாக்குதல்களை கையில் எடுத்தார். ராகுல் காந்தி வாரிசு அடிப்படையில் காங்கிரஸ் தலைவராவதாகவும், தான் ஏழை என்பதால் காங்கிரசுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.


PM Modi's change in Campaign style yield fruit to the BJP, says political Pandits.