பெங்களூரு வரும் சன்னி லியோனுக்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு- வீடியோ

  • 6 years ago
நடிகை சன்னி லியோன் பங்கேற்கும் குத்தாட்ட நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் வரும் டிசம்பர் 31ம் தேதி, இரவு, சன்னி நைட் இன் பெங்களூர் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்று நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்துவார் என்று தெரிகிறது.

இதனிடையே சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை இவர்கள் பெங்களூரில் போராட்டங்கள் நடத்திய நிலையில், மேலும் 15 மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
இந்த கன்னட அமைப்பின் தலைவர் ஹரீஷ் மற்றும் பொதுச்செயலாளர் சையது மினாஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், சன்னி லியோன் கர்நாடகாவை சேர்ந்தவரோ அல்லது இந்தியாவை சேர்ந்தவரோ கிடையாது. அவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரால் கர்நாடக கலாசாரம் கெடுவதை ஏற்க முடியாது

Pro-Kannada group Karnataka Rakshana Vedike Yuva Sene will protest in 15 districts in the state against Sunny Leone's participation in a New Year's Eve party.

Recommended