• 7 years ago
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தொண்டர்கள் உயிரோடு பார்த்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று நடந்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் பூங்குன்றன் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வேதா நிலையம் மிக முக்கியமான பாத்திரம். 30 ஆண்டு காலம் தமிழக அரசியலிலும் இந்தியா முழுவதிலும் அரசியல் தலைவர்களினால் உச்சரிக்கப்பட்ட பெயர்தான் போயஸ்கார்டனில் இருந்த வேதாநிலையம் வீடு. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் கடைசி நாளாக இருந்தது, செப்டம்பர் 22ஆம் தேதி. அதன்பிறகு தமிழக மக்கள் ஜெயலலிதாவைப் பார்த்தது சடலமாகத்தான்.

செப்டம்பர் 22 தான் வேதா நிலையத்தில் ஜெயலலிதா கடைசியாக வாழ்ந்த நாள். செப்டம்பர் 22ம் தேதி இரவு 11 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஜெயலலிதா சேர்க்கப்பட்டார். தனது உயிர் பிரியும் வரை அப்போலோவில்தான் இருந்தார். ஜெயலலிதா தன்னுடைய வாழ்நாளின் கடைசி 75 நாட்களை அப்போலோவில் கழித்தார்.

Sources say that Jayalalitha's secretary Poonkundran knows many secrets about the late leader's last minutes.

Category

🗞
News

Recommended