orarumugamundu

  • 9 years ago
எனது தந்தை, தனது இரண்டு முதல் மனிவிமார்களும் சிறிது காலத்திலேயே இறந்து விட்டபடியால் மூன்றாவதாக முப்பது வயதான எனது தாயாரை1930ல் மணந்தார் பிறக்கப் போவது பிள்ளையாக இருக்க வேண்டி எனது தாய்வழிப் பாட்டியின் வேண்டுகோளின் படி முருகபக்தனாகி முருகனுக்கு காவடியும் எடுக்கத் துடங்கினார். அப்படியே முதன்முதலில் பிறந்த குழந்தைக்கு பாலசுப்பிரமணியம் எனப் பெயரிட்டார்.
எனது பாட்டி ஒரு தகவலையும் தெரிவித்தார். அது பின்
வருமாரு: எனதருமைத் தாய் முதல் கர்ப்பிணியாக தனது தாய் வீட்டில் தங்கியிருந்தாள், எனது பாட்டி எப்பொழுதும் போல் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு எப்பொழுதும் போல் பக்திப் பாடல் ஒன்று பாடிக்கொண்டிருந்தார். ஓரிரவு ஊஞ்சலின் அருகே உறங்கிக் கொண்டிருந்த எனது தாயாரின் தலைமாட்டில் ஒரு நல்ல பாம்பு
படமெடுத்த படியாக இருந்து கொண்டிருந்தது.
படு திடுக்கிடைந்தாலும் எனது பாட்டியார் ஒரு சிறிதோசையும் எழுப்பாமல் முருகனை வேண்டத் துடங்கினார். பிள்ளைக் குழந்தையாய் பிறந்தால் அதற்கு முருகன் பெயரிடுவதாகவும். ஒவ்வொரு வருடமும் தவராது முருகனுக்கு காவடி எடுக்குமாரும் எனது தந்தையைக் கேட்டுக் கொண்டார்.அப்படியே கடவுளருளால் பிறந்த பிள்ளைக்கு எனது பாட்டியின்
வேண்டுகோளின் படி பாலசுப்பிரமணியம் எனப் பெயர்
சூட்டினார். காவடியும் எடுக்கத் துடங்கினார்.
அதென் காரணமோ முருனுடைய நேரடி கருணையோ என்னை இப்பாடலைப் பாடி டெயிலி மோஷனில் (Dailymotion) பதிவு செய்யுமாறு தூண்டப்பட்டு எனது 85 வது வயதில் (பிறந்தது 15 டிசம்பர் 1930) பாடி பதிவிரக்கினேன். இப்பதிவிரக்கம் செய்ய முடிந்ததே ‘மழலைகள்’ திரு ஆகிராவின் ஆ.கி.ராஜகோபாலன் அவர்களது (ஒரே புதல்வி) ஐஸ்வ்ர்யா யூட்யூபில் (Youtube) மிக கவனத்துடன் பரிசுரித்தனுப்பியதினால் தான். எனது (சுவீகாரப் புதல்வி) ஐஸ்வர்யா நூறாண்டுகாலத்திற்கும் மேல், நோய்நொடியில்லாமல் மகிழ்ச்சியுடனும், புகழுடனும் ,செழிப்புடனும் வாழ்க வாழ்கவென கடவுளை மனதார வேண்டிகொள்கிறேன். இப்பாடலை நான் ஆனந்த பைரவி ராகத்தில் பாடியிருக்கிறேன். .பதிவிர்க்க்கத்தில் முதல் இரண்டு ‘ஸ்லைடுகளுக்கும் தேவைப்படும் நேரத்தை (2நிமிடங்கள்) கொடுக்கத்தவறிவிட்டதற்கு. மிகவும்
வ்ருந்துகிறேன்; அதனால் எனது ஒரு பணிவான வேண்டுகோள்: 2நிமடங்களுக்கு ‘pause'செய்துவிட்டு மேலே தொடருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.