Tamilar Thiru Naal, Part, 1 - Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

  • 11 years ago
* "இன்னும் நித்திரையில் இருக்கும் தமிழா"...!!!

- ஆக்கம் : தமிழ் ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா - [B.Bala]

87280 லிமோஸ்

பிரான்ஸ்

* "இன்னும் நித்திரையில் இருக்கும் தமிழா"...!!!

"சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு - அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே அறிவுக்கு ஒவ்வாத இந்த அறுபத்தியாறு ஆண்டுகள்"...!

* "தரணி ஆண்ட தமிழர்களுக்கு தை [சுறவம்] முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு"...!!!

* "உலகெங்கும் அறுவடைத் திருவிழா! தமிழர்களின் தேசியப் பெருவிழா! மதங்களைக் கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு விழா தைப்பொங்கல்"...!!!

தமிழர்களின் கலாசார அடையாளமாய் நிமிர்ந்து நிற்கிறது பொங்கல் விழா, தமிழ் ஈழம், தமிழகம் போன்ற தமிழர்களின் மட்டுமல்லாமல் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொங்கல் விழாவினைக் கொண்டாடி தங்கள் இன, மொழி, சமூக, கலாசார, வாழ்வியல் அடையாளங்கள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சுமார் ஐம்பது நாடுகளில் இன்று தமிழர்கள் தங்கள் விழாவைக் கொண்டாடுகின்றார்கள்.

* " பொங்குவோம்...! பொங்குவோம்...! தமிழீழ விடுதலைப் பொங்கல் "...!!!

01, சுறவம் [தை] 2046 » [01.01.2046] » 14.01.2015

"பன்னாட்டுப் பாவியர் குத்திய பயங்கரவாத முத்திரைக் குப்பை தனைப் பெருக்கி தமிழீழத் தேசியக் கோலமிட்டு பொங்குவோம்...பொங்குவோம் தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

"தமிழீழத் தாயகத் தாக அரிசியெடுத்து துரோகமெனும் கல் நீக்கி ஒற்றுமைப் பால் வார்த்து புலமென்னும் பானையிலே - துணிந்தெழுந்து பொங்குவோம்...பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

"தமிழீழ வேட்கை பட்டாசாக தன்மானத் தமிழீழத் தேன் சேர்ந்து தளரா மனக் கரும்பஞ் சாறூற்றி வீரத் தீ மூட்டி தியாகக் கனி கூட்டி பொங்குவோம்...பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

"வழியிங்கு பிறந்ததென - ஞாயிறு ஒளியிங்கு வந்ததென வஞ்சகர் மறைந்தனர் என தமிழீழ எதிரிகள் எங்கோ ஒளிந்தனரென - மார்தட்டிப் பொங்குவோம்...பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

"எம் தமிழீழ ஆழ்கடலும் நீள் நிலமும் நம் வசமாக வளமாக வாடும் மனங்கள் இசை பாடும் மீன்களாக தமிழீழ நாடும் நலமாக யாழிசைக்க - தோள்தட்டிப் பொங்குவோம்...பொங்குவோம் தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

"கொதிப்பது தமிழீழத் தமிழர் மனமாக உதிப்பது எம் கதிராக - நெஞ்சில் பதிப்பது அழியா எம் புலி மாவீராங்கனைகளாக...எம் புலி மாவீரர்களாக மதிப்பது எம் தமிழீழத் தாய்த் தமிழாக - திரண்டு கூடிப் பொங்குவோம்...பொங்குவோம் தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!!!

* "பொங்கல் பொங்கல் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தானைத் தலைவனின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழத் தாயக மக்களின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!

* "பொங்கலோ பொங்கல் எம் தமிழீழத் தாயக விடுதலையின் விடுதலைப் பொங்கல்...!

- பா.பாலா