• 2 days ago
அதிமுக பாஜக கூட்டணி கைகூடி வந்துள்ளதாக பேச்சு அடிபட்ட நேரத்தில், மீண்டும் அதிமுகவுக்கு எதிரான அட்டாக் மோடை கையில் எடுத்துள்ளார் அண்ணாமலை. தற்போது இபிஎஸ்-யிடம் இருந்தும் அண்ணாமலைக்கு எதிராக கடுப்பான ரியாக்ஷன் வந்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அழுத்தம் திருத்தமாக பேசி வந்த அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், எங்களுடைய ஒரே எதிரி திமுக தான் என சொல்லி மீண்டும் கூட்டணிக்கான ஹிண்ட் கொடுத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் இருந்தும் க்ரீன் சிக்னலே வந்தது. அதனால் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி அமைக்கவிருப்பதாக பேச்சு அடிபட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை சாத்தியப்படுத்தியதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் கூட்டணி தொடர்பாக பேசும் போது அண்ணாமலை பேசிய சில விஷயங்கள் அதிமுகவினருக்கு கடுப்பை கொடுத்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் கிடைக்கிறார்கள் என சொன்னார். அதனை வைத்து அதிமுகவை அவர் மறைமுக அட்டாக் செய்துள்ளதாக பூகம்பம் கிளம்பியது. ஏற்கனவே இபிஎஸ்-ஐ அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்தது தான் அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு காரணமாக அமைந்தது. கடந்த சில நாட்களாக சைலண்ட் மோடில் இருந்த அண்ணாமலை மீண்டும் அதிமுகவை மறைமுகமாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாரா என்ற கேள்வி வந்துள்ளது. அதிமுகவினருக்கும் இது எரிச்சலை கொடுத்துள்ளதாக சொல்கின்றனர்.

அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு பேசவில்லை என இபிஎஸ் சொன்னாலும், அவருக்கும் அதிருப்தி இருப்பதாகவே தெரிகிறது. எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என இபிஎஸ்-யிடம் இருந்து ரியாக்ஷன் வந்துள்ளதை அதன் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது. அண்ணாமலையின் கருத்துகளால் அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் மீண்டும் முட்டி மோதும் சூழல் உருவாகி விடுமோ என தமிழக பாஜக சீனியர்களும் கவலையில் இருப்பதாக சொல்கின்றனர். இந்த கூட்டணியை சாத்தியப்படுத்துவதற்காக நடந்த முயற்சிகள் கைகூடும் நேரத்தில் 2 கட்சிக்குள்ளும் வார்த்தை மோதல் வெடித்துள்ளது கூட்டணியை சாத்தியப்படுத்துமா என்ற விவாதத்தை கிளப்பி வைத்துள்ளது.

Category

🗞
News

Recommended