இன்று கேட்டாலும் இனிமை தரும் ’அந்தப்புரத்தில் ஒரு மகராணி’

  • last year
அண்ணன் - தம்பி கதைகள் நிறையவே வந்திருக்கின்றன. அதேபோல், சிறுவயதில் வீட்டை விட்டு ஓடிப்போய் எங்கோ வளருபவரைப் பற்றிய கதைகளும் வந்திருக்கின்றன. சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்து, வாழ வைத்தவரின் மகளை தன் சகோதரியாகவே பாவித்து வாழ்கிற இளைஞனின் கதைகளும் வந்திருக்கின்றன. இந்த மூன்றையும் சேர்த்தால், தகதகவென ஜொலிப்பதுதான் சிவாஜியின் ‘தீபம்’ திரைப்படம்!

76-ம் ஆண்டின் மத்தியிலே அறிமுகமான கையுடன், கே.பாலாஜி, இளையராஜாவை புக் செய்து இந்தப் படத்தின் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தது அதுவே முதல்முறை. ஆமாம்... ‘தீபம்’ படம்தான் சிவாஜியும் இளையராஜாவும் இணைந்த முதல் படம். முதல் படத்திலேயே, அனைத்துப் பாடல்களையும் வெற்றிப் பாடலாக, அழகிய மெலடி கீதங்களாக இசைத்துக் கொடுத்தார் இளையராஜா.

படம் வெளியாகி, 46 ஆண்டுகளாகின்றன. இன்னும் ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’யும் ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே கிளியே’வும் நம்மை மயக்கிக்கொண்டே இருக்கின்றன.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill