ஹிஜாப் விவகாரம்; 30 அடியில் தேசிய கொடி; அதிர்ந்த உக்கடம்!

  • 2 years ago
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மற்றும் இஸ்லாமிய பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர், உக்கடம் ஜி.எம் நகரில் இருந்து உக்கடம் வள்ளியம்மை பேக்கரி வரை பேரணியாக வந்தனர். இந்த பேரணியில் சுமார் 30அடி நீளமுள்ள தேசிய கொடியினை ஏந்தியவாறும் ஹிஜாப்பிற்கு ஆதரவான பதாகைகளை ஏந்திவவாறும் பங்கேற்றனர். மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹிஜாப் எங்கள் உரிமை என்றும், கர்நாடக அரசை கண்டித்தும் உயர் நீதிமன்றத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாநாட்டிற்கு வந்தடைந்தனர்.