கண்களை சுற்றிக்கொண்டு இந்த இளைஞரின் உலக சாதனையை பாருங்கள் விருதுநகர் இளைஞரின் சாதனை

  • 2 years ago
இராஜபாளையத்தில் சேதுபந்தாசனம் என்ற யோகாசனத்தில் கண்களை கட்டிக் கொண்டு 1.30 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் - ல் இடம் பிடித்த இளைஞர்.


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி தெரு பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஐயப்பன் கடந்த சில மாதத்தில் விளையாட்டில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக 4 சாதனைகள் செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இந்நிலையில் விடா முயற்சியாக யூத் அக்ஷிவர்ஸ் மற்றும் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் முன்னிலையில் முதல் முறையாக சேதுபந்தாசனம் என்ற யோகாசனத்தில் கண்களை கட்டிக் கொண்டு 1.30 மணி நேரம் சிலம்பம் சுற்றி சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாச்சியர் ராமசந்திரன், காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டு சாதனை படைத்த ஐயப்பன் இளைஞருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சாதனை படைத்த இளைஞர் ஐயப்பன் தமிழகத்தில் இது போன்று உலக சாதனைகளை நிகழ்த்தும் மாணவ, மாணவியர்களை ஊக்குவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.