#Murali #ரேவதி இது சோறு, இது முருங்கக்கா குழம்பு , நல்லா சாப்பிடுங்க #முரளி Food Eating Comedy Video #TamilComedyVideos

  • 2 years ago
#Murali #ரேவதி இது சோறு, இது முருங்கக்கா குழம்பு , நல்லா சாப்பிடுங்க #முரளி Food Eating Comedy Video #TamilComedyVideos

சின்ன பசங்க நாங்க 1992 ஆம் ஆண்டு முரளி மற்றும் ரேவதி நடிப்பில், இளையராஜா இசையில், ராஜ்கபூர் இயக்கத்தில், ஏ. ஜி. சுப்ரமணியன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.

முத்துக்காளை (முரளி) நகரத்தில் படிப்பை முடித்து தன் கிராமத்திற்கு வருகிறான். அம்பலம் (ஆர். பி. விஸ்வம்) அந்த கிராமத்தின் தலைவர். பூச்செண்டு (சாரதா பிரீதா) முத்துக்காளையை விரும்புகிறாள். முத்துக்காளையின் முறைப்பெண்ணான மரிக்கொழுந்தும் (ரேவதி) அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள்.

ஒருநாள் வீசும் புயல் காற்றின் காரணமாக அந்த ஊர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அந்த ஊரிலுள்ள வீடுகள் இடிந்து ஏழை மக்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். புயல் காற்று ஓய்ந்து இயல்புநிலை திரும்பும் வரை அந்த கிராமத்துக் கோயிலில் தங்கிக்கொள்ள அம்பலத்திடம் அனுமதி கேட்கின்றனர். அம்பலம் அவர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கிறான். பூச்செண்டுவின் தாய் அந்தக் கோயிலின் பூட்டை உடைத்து மக்களை கோயிலுக்குள் தங்க வைக்கிறாள். தான் சொன்னதை மீறி அனைவரையும் கோவிலுக்குள் அழைத்துப் போனதால் ஆத்திரப்படும் அம்பலம் பஞ்சாயத்தைக் கூட்டுகிறான். அதில் பூச்செண்டுவின் தாய்க்கு அவள் தலையை மொட்டையடிக்கும் தண்டனையை வழங்குகிறான். மேலும் பூச்செண்டு அந்தக் கோயிலில் தேவதாசியாக உத்தரவிடுகிறான்.

இந்த அநீதியான தண்டனையைக் கண்டு கோபப்படும் முத்துக்காளை பூச்செண்டுவை அந்த தண்டனையிலிருந்து காப்பாற்ற அவளைத் திருமணம் செய்கிறான். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

Recommended