#Tv24 #templevision #ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முப்பதும் தப்பாமே என்னும் மாநாடு நிகழ்ச்சி

  • 2 years ago
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பதும் தப்பாமே திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி

தமிழகத்தின் முத்திரைச் சின்னமாக வழங்கக்கூடியது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் ஆண்டாள் கோவிலில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தனியார் அமைப்பு சார்பாக முப்பதும் தப்பாமே என்னும் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கோவில்களுக்கு கையில் ஏந்திய சீர்வரிசை தட்டுகளை ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சாற்றுவதற்க்கு எடுத்துச் சென்றனர். பன்னிரு ஆழ்வார்களுகுள் தனி பெருமையுடன் தமிழுக்கு சிறப்பு செய்தவருக்கு ஸ்ரீஆண்டாள் மார்கழியில் நோன்பு இருந்து திருப்பாவை என்னும் பெயரில் 30 பாகைகளை பாடி பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள திருநங்கநாதனிடம் ஐக்கியமானவள் ஆண்டாள்.கடந்த 3 வருடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முப்பதும் தப்பாமே என்னும் மாநாடு நிகழ்ச்சி தனியார் அமைப்பு சார்பில் நடைபெறுகிறது.