#chithiraitv #செந்தில்பாலாஜி எங்கள் கோரிக்கையை பரிசீலிக்க வில்லை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் |

  • 2 years ago
விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாய அமைப்புகளிடம் முதல்வர் ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கூறி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின்சாரத் துறை அமைச்சர் கரூர் சட்ட மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் 100 மேற்பட்டோர் கைது.


தமிழகத்தில் 10 மாவட்டங்கள் வழியாக விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க கூடாது எனக் கூறி கடந்த 5 ஆண்டுகளாக விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டதாகவும், சட்டமன்றத்திலும் பேசியுள்ளார். மேலும், திமுக தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். திமுக அரசு அமைந்தவுடன் இது தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சரிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி 10 மாவட்டங்களை சார்ந்த விவசாய அமைப்புகளை சார்ந்த விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கரூரில் உள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் சட்டமன்ற அலுவலகம் முன்பு உண்ணாவிரதத்துடன் கூடிய காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை முதல் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் இன்று மதியம் 12 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் ஒன்று திரண்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு கரூர் சட்டமன்ற அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் கோரிக்கை நிறைவேறும் வரை கரூர் மாவட்டத்திலேயே நாங்கள் அனைவரும் இருப்போம் என்று அப்பொழுது கூறினர்

பேட்டி : ஈசன் - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர்

Recommended