1980-களில் முன்னணி நடிகையாக இருந்த 'கல்லுக்குள் ஈரம்' புகழ் அருணா, சென்னை ஈ.சி.ஆர் கடற்கரையை ஒட்டிய தனது வீட்டில் சிறப்பான முறையில் தோட்டம் அமைத்திருக்கிறார். தக்காளி, வெண்டை, கத்தரி, வாழை, டிராகன் ஃப்ரூட், கொய்யா, தென்னை உள்ளிட்ட பல வகையான காய்கறிகள், கீரைகள், பூச்செடிகளும் இவரது வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்கின்றன. குறிப்பாக, கரும்பு, பேரீச்சை, பாக்கு ஆகிய பயிர்கள் அட்டகாசமான விளைச்சலைத் தருகின்றன.
Category
📚
Learning