#MRVNEWS #சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அனுசரிப்பு

  • 3 years ago
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 220-ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கரூர் அடுத்த வெங்கல்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 220-ம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம். ஆர்.விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக நாயக்கர் சமுதாயத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டு உருமி மேளம் இசைக்க தேவராட்டம் ஆடினார். இந்நிகழ்ச்சியை வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் நாய்க்கர் சமுதாயத்தை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Recommended