#BOOMINEWS | திமுக விற்கு பாஜக கட்சியின் தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கண்டனம் |

  • 3 years ago
சி.ஏ.ஏ & நீட் தேர்வு குறித்து மக்களிடம் தவறான தகவல்களை பரப்பி வரும் திமுக விற்கு பாஜக கட்சியின் தேசிய நிர்வாகி வேலூர் இப்ராஹிம் கண்டனம்

ஊட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., மற்றும் ‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு., சிறப்பு விருந்தினராக பாஜக கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுார் இப்ராஹிம் பங்கேற்று ஆர்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார். மேலும், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘‘மத்திய அரசை குறை கூறுவதையே தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்வதுதான் என் முதல் கையெழுத்து என்று ஸ்டாலின் சொன்னார். எக்காலத்திலும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய முடியாது. சி.ஏ.ஏ., மற்றும் ‘நீட்’ தேர்வு குறித்து மக்களிடம் தவறான தகவலை பரப்பி பொய், புரட்டு சொல்லும் தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மாநிலத்தில், கடந்தாண்டில், 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் ‘நீட்’ தேர்வு எழுதியுள்ளனர். அரசு பள்ளியில் படித்த பல மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. டில்லியில் பெண் காவலர் சபியா கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு காரணம் என, தி.மு.க., அரசின் துாண்டுதல், வன்முறை பேச்சை கண்டிக்கிறோம். இச்சம்பவத்திற்கு நாங்களும் கண்டனம் தெரிவித்துள்ளோம். உண்மை குற்றவாளிகள் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது எனும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கவும், மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மை மக்களுக்குச் சென்றடைவும் மத்திய அரசு துணை நிற்கும். இவ்வாறு, வேலுார் இப்ராஹிம் பேசினார். இந்த ஆர்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழகத்தினை ஆளும் திமுக அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.