கட்டாயம் தரிசிக்க வேண்டிய கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம்!

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx

கூவம் நதி இன்றுதான் சாக்கடையாக மாறிவிட்டது. ஆனால் ஒரு காலத்தில் இது மக்கள் பயன்படுத்திய புனித நதி. இதன் கரைகளில் நாகரிகம் செழித்து விளங்கியது. இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவை இதன் கரைகளில் அமைந்திருக்கும் ஆலயங்கள். ஆயிரம் ஆண்டுப்பழைமை வாயந்த ஆலயங்கள் பல கூவம் நதிக்கரையில் ஓரங்களில் உள்ளன. அவற்றுள் பராமரிப்பின்றி சிதைவுற்றுப் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆலயங்கள் பல. இதோ சமீபத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட ஆலயம் கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றுச் சிறப்பினையும் காண வாருங்கள் வீடியோவுக்குள் செல்லலாம்.
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob