“உலக சினிமாவின் சிறந்த இயக்குநர்களான பெட்ரிகோ பெலினி, ஆந்தரேய் தர்கோவ்ஸ்கி, குவெண்டின் டேரண்டினோ, ரோட்ரிகோ கார்சியா, அல்மதோர் போன்றோருடைய படங்களை தேடித்தேடி பார்ப்பேன். இப்போ வெர்ட்டிசீலி லக்கானி, பேஸில்லஸ் சப்ட்டிலஸ், அசோஸ் ஸ்பைரில்லாம், சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி இயற்கை விவசாயத்துக்கான உரங்கள் பெயர்கள்தான் நினைவுல வந்துட்டு போகுது. அந்தளவுக்கு இயற்கை விவசாயம் என்னோடு ஒன்றர கலந்து நிக்குது" என்று உற்சாகத்தோடு தன்னுடைய பண்ணைக்குள் வரவேற்கிறார் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி.ஆனந்த்.பிரமாண்ட ஒளிப்பதிவாளர், பிரமாண்ட படங்களின் இயக்குநர் என்ற அடையாளங்களைத் தாண்டி ஒரு மாணவனாக விவசாயத்தை கற்றுக்கொண்டு வருகிறார். காதல் தேசம், முதல்வன், சிவாஜி, ஜோஷ், நாயக்(இந்தி), தென்மாவின் கொம்பத்(மலையாளம்) போன்ற படங்களின் மூலம் ஒளிப்பதிவின் பிரமாண்டத்தைக் காட்டியவர், அயன், மாற்றான், கோ, கவண், காப்பான் போன்ற படங்களின் மூலம் பிரமாண்ட இயக்குநராகவும் தன்னை நிரூபித்தவர்.இவரது பண்ணை சென்னையிலிருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள ஆரம்பாக்கத்தில் இருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் திரும்பி அடர்ந்த மாந்தோட்டங்கள் நிறைந்த சாலையின் வழியே பயணித்தால் வருகிறது இவருடைய பண்ணை. சுட்டெரிக்கும் வெயிலிலும் இதமான காற்று வீச பண்ணைக்குள் இதமான சூழல் நிலவியது. நம்மை இன்முகத்தோடு வரவேற்றவர் தான் செய்து வரும் விவசாயம் சம்பந்தமாகப் பேசினார்.
Credits:
Producer - T.Jayakumar
Video - P.Kalimuthu
Edit - ArunKumar
Executive Producer - Durai.Nagarajan
Credits:
Producer - T.Jayakumar
Video - P.Kalimuthu
Edit - ArunKumar
Executive Producer - Durai.Nagarajan
Category
📺
TV