• 4 years ago
நமக்குப் பேரரணாக இருந்த காடுகளை அழித்தோம்; இயற்கையைச் சிதைத்தோம்; புயல், மழை, வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற வடிவங்களில், இயற்கையின் கோபத்தைச் சம்பாதித்தோம். ‘இப்போதாவது இயற்கையைச் சீரமைக்காவிட்டால், நாம் இன்னும் நிறைய இயற்கைப் பேராபத்துகளைச் சந்திக்க நேரிடும்’ என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு விதையை விதைத்துவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நம்மாழ்வாரின் சீடராக இருந்து, அவருடைய அறிவுரைப்படி 15 ஏக்கர் நிலத்தில் சூழலியல் காக்கும் அடர் வனத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன். அந்தச் சூழலியல் காக்கும் அடர் வனத்துக்குள் 500 வாழைகளும், கிராம்பும் சாகுபடி செய்து, தற்சார்பு வாழ்வியல் முறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் குணசேகரன்.

நிருபர் - துரை.வேம்பையன்
வீடியோ - நா.ராஜமுருகன்
ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்

Category

📺
TV

Recommended