• 4 years ago
#Nel Jayaraman #Agriculture #PasumaiVikatan

நம் முன்னோர்கள் உபயோகப்படுத்திய பல நெல் ரகங்கள், நம் கண்ணால் கூடக் காண முடியாத அளவுக்கு வழக்கொழிந்து விட்டன. பசுமைப்புரட்சியின் கை ஓங்கியிருந்த காலத்தில் அரசு வேலையைத் துறந்து விவசாயிகளிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தப் புறப்பட்டார், நம்மாழ்வார். அவருடன் சில மாதங்கள் சில இளைஞர்கள் குழுவாகப் பயிற்சி பெறுவது வழக்கம். அப்படி டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தில் நம்மாழ்வார் பின்னால் செல்லும் குழுவில் பயணித்தவர்களில் ஒருவர்தான் 'நெல்' ஜெயராமன். ’நெல்’ ஜெயராமன் என்ற பெயரைச் சொன்னால் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். கடந்த வருடம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் இயற்கையோடு கலந்த தினம் இன்று.

ஸ்கிரிப்ட் & எடிட் : துரை.நாகராஜன்
குரல் - செளந்தர்யா

Category

📺
TV

Recommended