• 5 years ago
#PasumaiVikatan #Herbals

சென்னையிலிருந்து சரியாக 99 கிலோ மீட்டர்... அச்சிறுப்பாக்கத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது, ‘99 கிலோமீட்டர் காபி ஸ்டாப்’. வாகனங்களை நிறுத்த விசாலமான இடம், முகப்பில், குழந்தைகளுக்கான பாரம்பர்ய விளையாட்டுப் பொருள்கள் கடை; உள்ளே இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள்கள் விற்பனை மையம்; கைத்தறி உடைகள் விற்பனை மையம்; இவற்றுக்கு நடுவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சாப்பிடும் வகையில் விசாலமான டைனிங். எதிரில், பசுமையைப் போத்திக்கொண்டு நீண்டு வளைந்து குமுறி நிற்கும் மலையை ரசித்துக்கொண்டே சாப்பிடலாம். பழரசத்துக்குத் தனி ஸ்டால், தோசை வகைகளுக்குத் தனி ஸ்டால், வெளிமாநிலப் பயணிகளுக்காக, அவர்களது பாரம்பர்ய சாட் வகைகளுக்குத் தனி ஸ்டால்... மிளகுவடை, வாழைப்பூ வடை, கீரைவடை, குழிப்பணியாரம் என நம் பாரம்பர்யப் பதார்த்தங்களுக்குத் தனி ஸ்டாலெனப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அச்சு முறுக்கு சுடச்சுட நம் கண்முன்னால் போட்டுத்தருகிறார்கள்.

ஒருங்கிணைப்பு, எடிட்டிங் - துரை.நாகராஜன்!
வீடியோ - தே.சிலம்பரசன்!

Category

📺
TV

Recommended