• 6 years ago
#metoo #bhuvanaseshan #singer #vairamuthu #radharavi #svsekar

மீடூ குறித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரபலங்கள் குறித்தும், தனியொரு பெண்ணாகவும், சிங்கிள் மதராகவும் இந்த சமூகத்தில் தான் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள், சமூகம் ஒரு தனித்த பெண்ணை உட்படுத்திப் பார்க்க விழையும் அவமானங்களுக்கு எதிராகப் போராடுவதற்கான தைரியத்தை தனக்குத்தானே முகிழ்க்கச் செய்யும் பிரயத்தனங்கள்... தனது போராட்டங்களுக்கு குடும்பத்தை சிரமத்திற்கு உட்படுத்தாது... இது எனது போர்... நானே.. நான் மட்டுமே இதை எதிர்கொள்வேன் எனும் திடம்... இப்படித் தனது நோ காம்ப்ரமைஸ் நிலைப்பாடுகள் ஒவ்வொன்றைக் குறித்தும் புவனா சொல்லிக் கொண்டே போகும் போது பெண் என்றால் போகப்பொருள் எனும் ரீதியில் நம் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் அநியாயங்கள் குறித்தான கோபம் நமக்குள்ளும் வேர்விடத்தான் செய்கிறது.

Category

🗞
News

Recommended