ஆசிரியை மாற்றத்தைக்கண்டித்து அறந்தாங்கி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • 5 years ago
காராவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 60க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் கல்விப்பணியாற்றி வருகின்றனர்.குறிப்பாக ஆசிரியை அன்புமணி கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் இப்பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்தது முதல் மாணவர்களுக்கு நல்ல கல்வி போதனையை வழங்கி வந்துள்ளார்.இதனால் பெற்றோர்கள் நன்மதிப்பை பெற்ற அன்புமணி ஆசிரியை திடீரென வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுதியுள்ளது. தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களது பிள்ளைகளை ஆசிரியை வருகைக்கு பிறகு உராட்சித் தொடக்கப் பள்ளி குழந்தைகள் நல்ல முறையில் படிப்பதைக் கண்டு தங்களது குழந்தைகளையும் சேர்த்ததாக கூறிய பெற்றோர்கள், தற்ப்போது ஆசிரியை மாற்றத்தால் மிகுந்த கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்தனர். எனவே அன்புமணி ஆசிரியை மீண்டும் அதே பள்ளிக்கு வர வேண்டும் எனக்கூறி பெற்றோர்கள் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

At Karavayal Panchayat Union Elementary School near Aranthangi in Pudukkottai district, a civilian in the area went on a road picket protest.

#RoadPicketProtest
#Pudhukottai
#Aranthangi

Recommended