அரசு பள்ளியின் விளையாட்டு மைதானம் போதிய பராமரிப்பு இல்லாத நிலை.

  • 5 years ago
#Theni #GovernmentSchool #SchoolPlayGround

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ளது விக்டோரிய நினைவு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியாகும். இந்த பள்ளியானது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. இப்பள்ளியின் விலையாட்டு மைதானமானது பள்ளியில் இருந்து அரைக்கிலோ மீட்டர் தொலைவில் தனியாக உள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் கால் பந்து, கைப்பந்து, தொடர் ஓட்டம், கூடைபந்து என அனைத்து விளையாட்டிற்கும் இடம் உள்ள ஒரு விளையாட்டு மைதானம் ஆகும். இந்த விளையாட்டு மைதனாம் பள்ளியோடு இனைந்து இல்லாமல் தனியாக உள்ளதாலும், போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் பகல் நேரங்களில் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாரி வருவதோடு இரவு நேரத்தில் மரு பிரியர்களின் கூடாரமாக உள்ளது. மேலும் மது குடிபாவர்கள் பாட்டில்களை உடைத்து போட்டு செல்வது இவற்றால் விளையாட்டு மைதானத்தை பயண்படுத்தும் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், கால்நடைகளின் தொந்தரவால் விளையாட்டு மைதானத்தை பயண்படுத்த முடியாத நிலையில் மைதானம் முழுவதும் புதர் நிறைந்து காணப்படுவதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காலநடைகள் உள்ளே செல்லாதவாரும் மது குடிப்பவர்களை காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள மற்றும் பொதுமக்கள்; கோரிக்கை விடுத்துள்ளனர்.