அரக்கோணம் அருகே கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது- வீடியோ

  • 5 years ago
வேலூர்மாவட்டம்,அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரயில் நிலையத்தில் கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில் கார்களை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டுள்ள பகுதி (யார்டிற்கு) ரயில் சென்ற போது சரக்கு ரயிலின் ஐந்து மற்றும் ஆறாம் பெட்டிகள் திடீரென தடம் புரண்டது இந்த ரயில் தடம்புரண்டதால் பெங்களூர் - சென்னை மார்கத்தில் செல்லும் ரயில்கள் காட்பாடி முதல்,பானாவரம்,வாலாஜா சாலை,முகுந்தராயபுரம் உள்ளிட்ட பல இடங்களில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ,பெங்களூர் - சென்னை செல்லும் அதி விரைவு ரயில் நீலகிரி எக்ஸ்பிரஸ் காவேரி எக்ஸ்பிரஸ் ,சேரன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட ரயில்களை நடு வழியில் ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர் ரயில் போக்குவரத்து அந்த பாதையில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மீட்பு நடவடிக்கையில் ஈடுபட அரக்கோணம் ரயில்வே ஊழியர்கள் தற்போது சம்பவ இடத்திற்கு வந்து பணிகளை மேற்கொள்ளகின்றனர் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் ரயில் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர் சென்னையிலிருந்தும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் மீட்பு நடவடிக்கை தற்போது தான் துவங்கியுள்ளது.

Goods Train Trapped in arakonam.