புதர்மண்டி கிடைக்கும் பயணியர் நிழற்குடை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை- வீடியோ

  • 5 years ago
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சிக்குட்பட்ட காமாட்சிபுரம் பெரியகுளம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணியா; நிழற்குடை உள்ளது. காமாட்சிபுரம் இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதி நிழற்குடை அமைக்க பல ஆண்டுகலாக கோரிக்கை வைத்திருந்த வந்த நிலையில் கடந்த 2014 -15 ஆம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டு முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நிழல் குடையை பயன்படுத்துவதை விட்டு விட்டு மீண்டும் கடும் வெயிலில் சாலையிலேயே காத்திருந்து பெரியகுளம் மதுரை.மற்றும் பல்வேறு வெளி ஊர்களுக்கு செல்வதற்கு அப்பகுதி மக்கள் சாலை ஓரம் காத்து கிடந்து தான் பேரூந்தில் ஏரி செல்ல வேண்டிய சு+ழ்நிலை உறுவாகி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை வாகனங்கள் வேகமா செல்வதால் அந்த பகுதி வாகன விபத்துகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது அது மட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் பெண்கள் என அணை வரும் வெயிலிலும் மழையிலும் சாலையோரம் பேருந்து வரும் வரை காத்து நின்று செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆதனால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பயன்பாடற்று கிடக்கும் பயணியர் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

des : Public request to bring the bumperty availability of passenger ships

Recommended