கருப்பு கொடி,தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு- வீடியோ

  • 5 years ago
முதுகுளத்தூர் அருகே குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்துதராததைக் கண்டித்து நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்து கருப்பு கொடி கட்டி 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்லூர் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்களம், 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றார் .எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்பது கிராம மக்களின் புகாராகும். கிராமத்திற்கான கண்மாய் ,வரத்துக் கால்வாய் , மற்றும் சாலைகள் அமைக்க கற்கள் கொட்டப்பட்டு காட்சி பொருளாக உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அக்கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா என்பவர் கூறியதாவது. எங்கள் கிராமத்திற்கு இது வரை காவேரி குடிநீர் வழங்கவில்லை எனவும் , உப்பு நீரைத்தான் குடிநீராக பயன் படுத்துவதாகவும் இதனால் தொற்று நோய் பரவுவதாகவும் தெரிவித்தார். குடிநீர்க்காக அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். மேலும் அக்கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் கூறும்போது எங்கள் ஊர் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வயை தூர் வாராமல் விவசாயம் செய்ய முடியவில்லை என்றார். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது ஆதார் கார்டு , வாக்காளர் அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்போம் என்றார்

DES : The black flag, the villagers declare that the election will be ignored