• 5 years ago
திருச்சூரைச் சேர்ந்த கத்தோலிக்க
பாதிரியார் ராபின் 2016ம் ஆண்டு கோட்டியூர்
தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றியபோது,
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

அச்சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில்,
அந்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க முயன்றபோது
பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து பாதிரியார் கைதானார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய
தலசேரி நீதிமன்ற நீதிபதி, வினோத்
போக்ஸோ சட்டத்தின் கீழ் அவரது
குற்றச்செயல்கள் சந்தேகத்திற்கிடமின்றி
நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பாதிரியார் ராபினுக்கு 3 லட்சம் அபராதமும், 60
ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும்
நீதிபதி உத்தரவிட்டார்.

Category

🗞
News

Recommended