குஜராத்ல காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்துது.
கட்சி தலைவர் ராகுல் கலந்துகிட்டார்.
அவர் மேடைல ஏறினதும் நிர்வாகிகள் மாலை போட்டு வரவேற்றாங்க.
ஒரு சீனியர் லேடி நிர்வாகி மாலை போட்றதுக்கு முன்னாடி
உரிமையோட ராகுல் தலைய
தன்னோட ஒசரத்துக்கு இழுத்து கன்னத்துல முத்தம் கொடுத்தாங்க.
அவங்க பேரு கஷ்மீரா பென்.
என்னங்க, காதலர் தினம் ஸ்பெஷலான்னு மீடியாகாரங்க கேட்டாங்க.
கஷ்மீரா வெக்கமா சிரிச்சாங்க.
“அட, போங்கப்பா. எனக்கு 60 வயசு ஆவுது.
ராகுல் எனக்கு தம்பி மாதிரி.
48 வருசமா கட்சில இருக்கேன்.
ராகுலோட பாட்டி, அப்பான்னு எல்லாரையும் பாத்துட்டேன்.
அடுத்து இவரும் பிரதமர் ஆகணும்னு அட்வான்சா
வாழ்த்து சொன்னேன், அவ்ளதான்” னார்.
Category
🗞
News