நீண்ட இடைவெளிக்கு பின் நிஸான் களமிறக்கிய கிக்ஸ் எஸ்யூவி

  • 5 years ago
இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய கிக்ஸ் எஸ்யூவி.இந்த எஸ்யூவியின் ஆக்சில்களுக்கு இடையிலான வீல் பேஸ் 2,673 மிமீ என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 432 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவியில் 106 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended