• 5 years ago
நடைபாதைகளை
கார், பைக் நிறுத்தும் இடங்களாக மாற்ற
சென்னை மாநகராட்சி திட்டம் தீட்டியுள்ளது.

நடைபாதையில் கார் நிறுத்த
ஒரு மணி நேரத்துக்கு 80 ரூபாய்;
பைக், ஸ்கூட்டர் நிறுத்த
ஒரு மணி நேரத்துக்கு
20 ரூபாய் செலுத்த வேண்டும்.

வழக்கமான பார்க்கிங் ஏரியாவில்
கட்டணம் என்று சொல்லப்படும் இந்த தொகை
நடைபாதை பார்க்கிங் ஏரியாவில்
அபராதம் என்று குறிப்பிடப்படும்.

நோ பார்க்கிங் ஏரியா என்று
போர்டு வைத்த இடங்களில் வண்டியை நிறுத்த
ஒரு மணி நேரத்துக்கு 160 ரூபாய் செலுத்த வேண்டும்.

மாநகராட்சியின் புதிய பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம்
அடுத்த வாரம் அமலுக்கு வருகிறது.
அண்ணா நகர், பெசன்ட் நகர், புரசவாக்கம், மெரினா பீச்
உட்பட நகரின் பல பகுதிகளில் உள்ள
4,200 பார்க்கிங் ஸ்லாட்டுகள் இந்த சிஸ்டத்தில் வரும்.
அடுத்து மேலும் 12,000 ஸ்லாட்டுகளுக்கு
இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.

Category

🗞
News

Recommended