• 5 years ago
படங்கள் ரிலீஸ் ஆன உடனே
இன்டர்நெட்ல அத இலவசமா வெளியிட்டு
சினிமா தொழிலுக்கு சவாலா இருக்ற
தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்ட அழிச்சே தீருவேன்னு
சபதம் போட்ருந்தார் விஷால்.

இளையராஜா 75 விழாவுக்கு
போலீஸ் பாதுகாப்பு கொடுத்ததுக்காக
சீயெம் பழனிசாமிக்கு தேங்ஸ் சொல்ல
கோட்டைக்கு வந்திருந்த விஷால்கிட்ட
அத பத்தி கேட்டாங்க மீடியாகாரங்க.

தன்னால முடியலைனு ஓப்பனா
தோல்விய ஒத்துகிட்டார் விஷால்.
எடப்பாடி அரசு நினைச்சாதான்
தமிழ் ராக்கர்ஸ் மேல கைவைக்க
முடியும்னும் சொன்னாரு.

Category

🗞
News

Recommended