• 5 years ago
சென்னை சென்ட்ரல்
ரயில் நிலையத்தில்
நவம்பர் மாதம் கேட்பாரற்று
கிடந்த 11 பனியன் பார்சல்களை
கைப்பற்றி ரயில்வே அதிகாரிகள்
விசாரித்தபோது
பார்சல் ஊழல் அம்பலமானது.
குறைந்த எண்ணிக்கையில்
பார்சல்களை அனுப்பியதாக
கணக்கு காட்டி விட்டு,
அதிக எண்ணிக்கையில் பார்சல்களை அனுப்பி
ரயில்வேக்கு வர வேண்டிய வருவாயை
பார்சல் ஊழியர்கள்,
ஆர்பிஎப் போலீசார்,
பார்சல் ஏஜெண்டுகள்
களவாடியது அம்பலமானது.

ஊழலில் பல அதிகாரிகள் சிக்குவர்
என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
ஊழலுக்கு ஆதாரமான
11 பார்சல்களை 5 ஊழியர்கள்
எடுத்துச் சென்று விட்டனர்.

அதிகாரியை மிரட்டி
பார்சல்களை தூக்கிச்சென்ற
யுவராஜ் உட்பட 5 ஊழியர்கள்
சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
யுவராஜ்
எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர்
கண்ணையாவின் உறவினர்.


குற்றச்சாட்டப்பட்ட
ஐந்து பேர் மீதும் இலாகாபூர்வ
விசாரணை துவங்கியது.
ஆனால் அவர்கள்
மருத்துவ விடுப்பில் சென்றதால்
விசாரணை நடக்கவே இல்லை.

பார்சல் ஊழல் விவகாரத்தில்
திடீர் திருப்பமாக ஐந்து பேரும்
மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அதுதொடர்பாக ரயில்வே பிறப்பித்த
உத்தரவுகள் ஆர்டிஐ சட்டம் மூலம்
வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


ஐந்து பேரும் வேலை நீக்கம்
செய்யப்பட வேண்டியவர்கள்;
ரயில்வே நிர்வாகத்துக்கு
எஸ்.ஆர்.எம்.யூ தரப்பிடமிருந்து
நெருக்கடி வந்ததாலேயே
ஐந்துபேரும்
மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக
கூறப்படுகிறது.

(பைட்)
கே.நந்தகுமார்
ரயில் மஸ்தூர் யூனியன்

சஸ்பெண்ட் ஆன ஐந்து பேருக்கு
மீண்டும் பணி வழங்க காரணம் என்ன?
அவர்கள் நிரபராதிகள் என
முடிவு செய்யப்பட்டதா?
வழக்கு மூடப்பட்டதா?
பார்சல் ஊழலுக்கு ஆதாரமான
11 பனியன் பார்சல்கள் என்னாச்சு?
அது பற்றிய வீடியோ ஆதாரங்கள் என்னாச்சு?
பார்சல்கள் காணாமல் போனதாக
அளிக்கப்பட்ட புகார் என்னாச்சு?
என பல கேள்விகளுக்கு
ரயில்வே தரப்பிலிருந்து விடையில்லை.
தவறிழைத்த ஐந்து பேரும்
தண்டனையிலிருந்து தப்பட்டும்;
ஊழலை அம்பலப்படுத்திய
ரயில்வே அதிகாரி சம்பத்ராமை
சொத்தை காரணங்களுக்காக
நிர்வாகம் இடமாற்றம் செய்ததைத்தான்
பொறுக்க முடியவில்லை என,
நேர்மையான அதிகாரி ஒருவர் கூறினார்.

Category

🗞
News

Recommended