• 5 years ago
Homegrown என்ற ஆன்லைன் மீடியா கம்பெனியின்
இணை நிறுவனர் வருண் பத்ரா என்பவர்
புதிய சுழலில் சிக்கியுள்ளார்.

இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை
பாசாங்கு எதுவும் இல்லாமல் பிரதிபலிக்கும் ஒரே மேடை
என்று விளம்பரப்படுத்தியதன் மூலம்
Homegrown ஆதரவாளர்களில் இளம் பெண்கள்
எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.

வருண் பத்ராவுக்கு இது வசதியாகி விட்டது.
தினமும் ஒருத்தி என்கிற ரேஞ்சில் உல்லாசம் அனுபவித்தார்.
மீ டூ சூறாவளி தொடங்கியதும்
பெரிய தலைகள் எல்லாம் அசிங்கப்பட்டு உருள்வதை கண்டு
வருண் மிரண்டு போனார்.

பரஸ்பர சம்மதத்துடன் செக்ஸ் வைத்து கொள்வது
சட்டப்படி தண்டிக்க கூடிய குற்றம் அல்ல என்று
சுப்ரீம் கோர்ட் சொல்லியும் அவருக்கு பயம்.

இப்போது சம்மதிப்பவள் பிறகு மனம் மாறிவிட்டால்
மரியாதை நாறிவிடுமே என்ற பீதி விலகவில்லை.
அதற்காக செக்சை விடவும் மனம் இல்லை.
யோசித்து யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்.

சம்மதம் சொல்வதில் தொடங்கி
செக்சின்போது சொல்லும் வார்த்தைகளையும்
முக்கல் முனகல் ஒலிகளையும் செல்போனில் பதிவு செய்தார்.
ஒருவேளை அந்த பெண் என்றைக்காவது எதிராக திரும்பி
மீ டூ அணிவகுப்பில் இழுத்து விட்டால்
சம்மதம் வாங்கியதற்கான ஆதாரமாக
ஆடியோ பதிவை வெளியிடலாம் என்பது
வருண் தலைக்குள் உதித்த ஐடியா.

செல்போனை எடுத்து ஆடியோவை ஆஃப் செய்வதை
ஒரு பெண் கவனித்து விட்டாள்.
என்ன என்று கேட்டபோது
எதையும் மறைக்காமல் சொல்லியும் விட்டார்.

அரண்டுபோன அந்த பெண் அதை அப்படியே
இன்ஸ்டாக்ராமில் விவரித்து அம்பலப்படுத்திவிட்டாள்.

வருண் செய்தது சரியா தப்பா என்று
சோஷல் மீடியாவில் பட்டிமன்றம் ஓடுகிறது.

Category

🗞
News

Recommended