• 5 years ago
கம்பெனி அதிகாரிகள் ரெண்டு பேருக்கு
தண்டனையும் சம்பள குறைப்பும் விதிச்சிருக்கு
சீனாவோட நம்பர் ஒன் செல்போன் கம்பெனி வாவே.
(ஹூவே சொல்லாதிங்க, வாவேதான் கரெக்ட்)

என்ன தப்பு செஞ்சாங்களாம்?

ஹேப்பி நியூ இயர்னு எல்லாருக்கும்
புத்தாண்டு வாழ்த்து அனுப்புனதுதான் அவங்க செஞ்ச தப்பு.

ஐ மீன்..
வாழ்த்தினது தப்பு இல்ல..
அத ஐஃபோன் மூலமா தெரிவிச்சதுலதான்
வாவேக்கு செம கடுப்பு.

“நாமளே ஆப்பிள் கம்பெனியோட
இண்டர்நேசனல் லெவல்ல மோதிகிட்டு இருக்கோம்.
நம்ப கம்பெனியோட P சீரிஸ் ஃபோன்லாம்
ஐஃபோனுக்கு கடுமையான போட்டியா வந்திருக்கு.
இந்த நேரத்துல ஐஃபோன் மூலமா வாழ்த்துறதா?”னு
ரெண்டு அதிகாரிகள் சம்பளத்த கட் பண்ணி சஸ்பெண்ட்
செஞ்சிருக்கு வாவே நிர்வாகம்.

டீயெம்கே ஏடியெம்கே பகைகூட கொறஞ்சிட்டு வருதுனு பாத்தா
கார்ப்பரேட் பகையெல்லாம் பயங்கரமாய்ட்டு இருக்கே..

Category

🗞
News

Recommended