• 5 years ago
ருப்பு அங்கியுடன் போலீஸ் உதவியுடன்
சபரிமலை கோயிலுக்குள் புகுந்த 2 பெண்களும்
தாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகள்தான்
என்பதை ஓப்பனாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் பினராயி விஜயன் அரசின் பித்தலாட்டம்
வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இரு பெண்களும் அளித்த பேட்டி:


உண்மையில் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

பிந்து: அதை சொல்ல முடியாது.

கனகா: எனக்கு மூடநம்பிக்கை கிடையாது.


சபரிமலை கடும் விரதம் இருந்து போகும் இடம். நீங்கள் ஏன் போனீர்கள்?

பிந்து: சமூக அக்கறைதான்.

கனகா: பக்தி இல்லை என்றால் கோயிலுக்கு போகக் கூடாதா?


பப்ளிசிடிக்காகத்தானே போனீர்கள்?

பப்ளிசிடி கிடைத்ததில் சந்தோசம்.


போலீஸ் எவ்வளவு தூரம் உதவி செய்தது?

எப்படியாவது நிலக்கல் வந்து விடுங்கள். அங்கிருந்து நான் பார்த்து கொள்கிறேன் என்று கோட்டயம், எஸ்.பி ஹரி சங்கர் சொன்னார். கொடுத்த வாக்கை காப்பாற்றினார்.


சீயெம் விஜயன் விரும்பியபடி போலீசின் கருவியாக நீங்கள் செயல் பட்டீர்களா?

போலீஸ் எங்களை கருவி ஆக்குமா? ஆஹா. அதெல்லாம் இல்லை. நாங்கள்தான் போலீசை கருவியாக பயன்படுத்தினோம். சீயெம் ரோல் என்ன என்பது எங்களுக்கு தெரியாது.


மாவோயிஸ்ட் அமைப்புடன் உங்களுக்கு தொடர்பு இருக்கிறதா?

பிந்து: கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு உண்டு. மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பில் பல ஆண்டுகள் பொறுப்புகள் வகித்தேன். போராட்டங்கள் நடத்தியதுண்டு. ஐ.பி.எஸ் அதிகாரியை தடுத்தது, போலீஸ் காவலில் இருந்து தப்பியது என என் மேல் சில வழக்குகள் இருந்தன. அவை அரசால் வாபஸ் பெறப்பட்டு விட்டன.

கனகா: என் தந்தை தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவாளர். எங்கள் குடும்பமே கம்யூனிஸ்ட் குடும்பம்தான்.


கணவருக்கே தெரியாமல் சபரிமலைக்கு வந்தீர்களா?

பிந்து: என் கணவருக்கு நான் வருவது தெரியும்.

கனகா: எந்த பிரச்னையிலும் தலையிடாதே என்பார் என் கணவர். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. அதனால் சொல்லவில்லை.

அய்யப்ப தரிசனம் செய்தோம் என சொன்னாலும் இரு பெண்களும் கடைசி வரை நெற்றியில் விபூதி, குங்குமம், சந்தனம் எதையும் இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Category

🗞
News

Recommended